தமிழன் பெருமை கூறும் தமிழ்மொழி " கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய தமிழ் மொழி எங்கள் உயிர் மொழி" உலகம் போற்றும் எங்கள் தாய் மொழியே உனக்கு உண்டோ இணையாக உலகில் வேறு மொழி. மொழித்துணையின்றி மூவகை சுட்டொலிகளில் இருந்து சொற்கள் தோன்றியமையே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும்.இத் தமிழினதும் தமிழனினதும் பிறப்பிடம் குமரிக்கண்டமே. மனிதனாக மருவிய இனம் பேசிய முதல் மொழி இத் தமிழ் மொழியே. நாகரிகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள் இவர்கள் தமக்கென ஓர் பண்பாடு, கலாச்சாரத்தை உருவாக்கி கட்டுக் கோப்பாக வாழ்ந்தனர். இவர்களே உலகிலேயே ஓர் மொழியை இனம் என்று கூறும் கூற்றை உருவாக்கினர். தமிழர்கள் "ஓர் பிரிவினர்களல்ல மனித இனத்தின் ஆணி வேர்" ஆவர். வீரமாமுனிவர் அமைத்த வீரத்தமிழ் 15 ம் நூற்றாண்டு அளவிலேயே தற்காலத் தமிழிற்கு மிக நெருங்கிய எழுத்து வடிவம் பெற்றது. "மொழிக்கு மட்டுமன்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவன் தமிழன்" உலகின் முதல் மொழியாக நம் தாய்மொழி "உலக தமிழ் செம்மொழி" தோற்றம் கி.மு 50000 காலப்பகுதியில் ஆகும். எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடி...