Posts

Showing posts from November, 2020

பூகோளமயமாதலில் வறுமை

Image
21 ஆம் நூற்றாண்டில் பூகோளமயமாதலானது பரந்து விரிந்து காணப்படுகின்றது. இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. இப் பூகோளமயமாதலானது 1980 களிலிருந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகவும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலேயே இச் சிந்தனை முதன் முதலாக தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். பூகோளமயமாதல் என்ற பதத்தை பொருளியலாளர்கள் 1981 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் என “தியோடோர் லெவிட் “ (Theodore Levitt) என்பவர் எழுதிய “ சந்தைப் பூகோளமயமாக்கல்” ( Globalization Of Market) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பூகோளமயமாதல் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. அந்தவகையில் இளம் தலைமுறையினர் அதிகமாக குழப்பப்படுகின்றனர். அவர்கள் பூகோளமயமாதல் மனித சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளதாக நம்புகின்றனர். இதனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் என்பன எட்ட முடியாத வறிய நாடுகளிற்கும் எட்டி உள்ளதாக நம்புகின்றனர்.  ஒவ்வொரு நாட்டில...