தொடர்பாடலின் வகைகள்

தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை கடத்துவதாகும்.இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்து. தொடர்பாடல் நடைபெறுவதற்கு மொழி என்பது அவசியமான ஒன்றாகும்.பேச்சு,எழுத்து மற்றும் குறியீடுகள் மூலமும் தொடர்பாடலானது நடைபெறுகினறது.இத்தகைய தொடர்பாடலானது முக்கியமாக 04 வகைப்படும். 1. அகத் தொடர்பாடல் 2. ஆளிடைத் தொடர்பாடல் 3. குழுத் தொடர்பாடல் 4. வெகுஜன தொடர்பாடல் அகத் தொடர்பாடல் என்பது தனிமனிதனிற்குள் ஏற்படும் தொடர்பாடலாகும்.அதாவது தனிமனிதன் தன்னிலை சார்ந்து தனக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்துவதாகும். இவ் அகத் தொடர்பாடலால் சாதகமான விளைவுகளும் பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன. சாதகமான விளைவு எனும் போது தனிமனிதன் தன்னைத் தானே அறிந்து கொண்டு தன்னுடைய நிறை குறைகளை அறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உதவுதல். அகத் தொடர்பாடலால் ஏற்படும் தீமைகளாக சரியான தீர்மானம் எடுக்க முடியாத போது தவறான பாதைக்குள் தள்ளப்படுவதுடன் மன உளைச்சலுக்கும்ஆளாதல் ஆளிடைத் தொடர்பாடல் என்பது இரு நபர்களிற்கிடையில் ஏற்படுவதாகும். இது தற்காலத்தில் தொலைபேசிகளிலேயே அதிகம் இடம் பெறுகின்றது. குழுத் தொடர்பாடல் என்பது இரண்டு நபர்களிற்கு மேலே தொடர்பாடலினை மேற் கொள்ளும் போது அது குழுத் தொடர்பாடல் எனப்படும். இது பொதுவாக மக்கள் கூடும் இடங்கள்,ஆலயஙகள்,பாடசாலைகள் ஆகியவற்றில் நடைபெறுகின்ற தொடர்பாடலாகும். வெகுஜனத் தொடர்பாடல் என்பது ஒரு ஊடகத்தின் ஊடக பாரிய மக்கள் கூட்டத்திற்கு ஒரே நேரத்தில் செய்தியானது சென்றடைவதை குறிப்பதாகும்.வெகுஜனத் தொடர்பாடலானது அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் நவீன ஊடகங்கள் ஊடாக நடைபெறுகிறது. ஆளிடைத் தொடர்பாடல், குழுத் தொடர்பாடல் ஆகியவற்றில் அனுப்புனர், பெறுனர்களிற்கான தொடர்பானது ஆழமானதாக காணப்படும். ஆனால் வெகுஜன தொடர்பாடலில் குறைவானதாக காணப்படும்.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை