பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

21 ஆம் நூற்றாண்டில் பூகோளமயமாதலானது பரந்து விரிந்து காணப்படுகின்றது. இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. இப் பூகோளமயமாதலானது 1980 களிலிருந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகவும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலேயே இச் சிந்தனை முதன் முதலாக தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். பூகோளமயமாதல் என்ற பதத்தை பொருளியலாளர்கள் 1981 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் என “தியோடோர் லெவிட் “ (Theodore Levitt) என்பவர் எழுதிய “ சந்தைப் பூகோளமயமாக்கல்” ( Globalization Of Market) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பூகோளமயமாதல் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. அந்தவகையில் இளம் தலைமுறையினர் அதிகமாக குழப்பப்படுகின்றனர். அவர்கள் பூகோளமயமாதல் மனித சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளதாக நம்புகின்றனர். இதனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் என்பன எட்ட முடியாத வறிய நாடுகளிற்கும் எட்டி உள்ளதாக நம்புகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் காலனித்துவம் காணப்பட காரணம் இப் பூகோளமயமாதலே எமது நாட்டிலும் காலனித்துவம் இல்லாதிருந்தால் பாதைகள் , புகையிரத பாதைகள் போன்றவற்றை நாம் கண்டிருக்கவே மாட்டோம். சரவதேச மூலதனத்தின் உற்பத்திப் பொருட்களிற்கும் சேவைகளிற்கும் சந்தை தேடும் போட்டியே பூகோளமயமாதல் ஆகும். தற்போது அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என்பவற்றை அணியாக கொண்ட ரஸ்யா, சீனா, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் பக்க பலமாக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாடு தங்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவுப்பழக்கம், ஆடைகள் போன்றவற்றை இன்னொரு நாட்டின் மீது திணித்து அதனை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் காலணித்துவமாகும். இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் அதே வேளையில் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இத்தகைய பூகோளமயமாதலானது சில நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ளன. பூகோளமயமாதலினால் ஏற்படும் நன்மைகள் : 1.பொருட்கள் பரிமாற்றம் அதாவது பூகோளமயமாதல் காரணமாக ஒரு நாட்டின் உற்பத்திப் பொருட்கள் இன்னொரு நாடடிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் மற்றைய நாட்டில் இருந்து இறக்குமதியும் செய்யப்படுகிறது. உதாரணமாக : கறுவா, ஏலம் போன்றன ஏற்றுமதி செயயப்படல் பட்டு, பருத்தி போன்றன இறக்குமதி செய்தல் 2.சேவைகளை பெற்றுக் கொள்ளல் சேவைகள் எனும் போது போக்குவரத்து, மின்சர தேவைகள் மற்றும் புகையிரத , விமான சேவைகளை பெற்றுக் கொள்ளல் உதாரணமாக : அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தமது கிளைகளை Branch உருவாக்கி அதிகளவிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தல் 3. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு இலகுவாக செல்வுதல். 4. தொடர்பாடல் அதாவது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் உள்ள உறவினர்களுடன் அல்லது வியாபார நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள தொடர்பாடல் உதவுதல். 5. வருமானத்தை ( அன்னிய செலாவணி ) அதிகரித்தல் அதாவது வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதால் எமது நாட்டில் அதிகளவிலான அன்னிய செலாவணி பெற்றுக் கொள்ளல். 6. பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைதல். 7. அரசியல், பொருளாதார நிலையில் சுதந்திரம் காணப்படல். அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல். GATT என்ற ஒப்பந்தம் காரணமாக வியாபார வளர்ச்சி அதிகரித்துச் சென்றது. அதாவது வரிகள் அறவிடப்படாத தன்மை என்பவற்றால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. 8. வாழ்க்கை வட்டம் அதிகரித்தல். குடியேற்றம், குடியகழ்வு என்பவற்றில் தளர்வு நிலை ஏற்படும் போது மக்கள் வேறு நாடுகளுக்கு சென்று தொழில் செய்தல். இதன் மூலம் வாழ்க்கை வட்டம் அதிகரித்தல் . இவ்வாறு பூகோளமயமாதலானது நன்மைகளை செய்யும் அதே வேளை தீமைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே பூகோளமயமாதலினால் ஏற்படும் தீமைகளாக பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன. 1. உணவு முறையில் ஏற்படும் மாற்றம் அதாவது பூகோளமயமாதல் காரணமாக அனைத்து நாடுகளின் உணவுப்பழக்கங்களை மக்கள் உள்வாங்குதல் . வேறு நாடுகளின் உணவகங்கள் எமது நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் போது உணவுப்பழக்கங்கள் மாற்றமடைதல். உதாரணமாக : Pizza Hut வேறு நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கை , யாழ்ப்பாணம் போன்ற நாடுகளிலும் இடங்களிலும் காணப்படுகிறது. 2. சுற்றுச்சூழல் அழிவடைந்து செல்லுதல். உதாரணமாக: தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் வெளியேறும் கழிவுகள் பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனை 3. பாரம்பரிய கலாச்சாரம் அழிவடைந்து செல்லல். ஆடைகளில் ஏற்படும் மாற்றம் அதாவது Jeans அணிதல் சாறி கட்டும் பாரம்பரியம் குறைவடைந்து செல்லல். 4. மக்கள் நலன் கவனிக்கப்படல் குறைவு 5. அரசியல் கொள்கைகள் பூகோளமயமாதல் காரணமாக கவனிக்கப்படாத தன்மை காணப்படல். உதாரணமாக : இலங்கை, இந்திய மீன்பிடி , இந்திய மீனவர்கள் எல்லைகளை தாண்டி மீன்பிடித்தல். இவ்வாறு பூகோளமயமாதலினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. வறுமை என்பது ( poverty ) உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்பு பெறுதல், போன்றவை உட்பட வாழ்க்கை தரத்தை தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும் . தற்காலத்தில் பூகோளமயமாதலானது பரந்து விரிந்து காணப்படும் நிலையில் வறுமையும் அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகின்றது. காலணித்துவத்திற்கு மாற்றீடாக தேசிய முதலாளித்துவம் காணப்பட்ட காலகட்டத்தில் உலக உற்பத்தி முறை ஒன்றிணைந்த உலக உற்பத்தி முறையாக மாறியது. இக்காலகட்டத்தில் சோசலிஸ நாடுகளினது காலனியாதிக்க பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளினதும் தேசிய பொருளாதார கட்டமைப்பு வலுவடைந்தது. இதனால் சர்வதேச மூலதன ஆதிக்கம் செயலிழந்தது. இதில் சோசலிஸ நாடுகளில் பல பரீட்சார்த்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அப் பொருளியல் முறை உழைப்பிற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதன் மூலம் உற்பத்தி சாதனங்களை வெளியிட்டு சமத்துவமான உற்பத்தியை நிலைநாட்டவும் உற்பத்திகளை சமமாகப் பகிர்ந்தளித்து , வருமான ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் சமூகத்தை உருவாக்க முயற்சித்தன. ஆனால் இதற்கு ஆரோக்கியமான பூகோள வலைப்பின்னல் இருக்கவில்லை. இதனை சர்வதேச மூலதனம் பயன்படுத்தி கொண்டது. 1989 சோவியத் யூனியன் முற்றாக சிதைந்தது. இதற்கு பிறகு ஏற்பட்ட நகர்வின் வளர்ச்சியுடன் 1995 இல் ஏகோபித்த நிகழ்சசி நிரலுடன் பூகோளமயம் எழுந்தது. அதாவது மூலதனத்தை பூகோளமயமாக்கி உற்பத்தி முறையிலும் , விநியோகத்திலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தியது. பூகோளமயமாதலினால் வறுமைப்பட்ட மக்கள் மேலும் வறுமையடைந்து செல்வதாகவும் பணக்கார வர்க்கத்தினர் மேலும் பணக்கார வர்க்கத்தினராக முன்னேறிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. இதனால் வறுமைப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மற்றைய பக்கம் நன்மை அடைகின்றது. அந்தவகையில் பூகோளமயமாதலால் ஏற்படும் நன்மைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். 1. பூகோளமயமாதல் காரணமாக நாடுகளில் பஞ்சநிலைமை காணப்படல். அதாவது 1961 க்கும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் 6.1 சதவீதமாக இருந்தது. 1973 முதல் 1990 வரை 2.8 சதவீதமாக இருந்தது. 1990 களுக்குப் பிறகு 1.1 சதவீதமாக அல்லது அதிலும் குறைவடைந்து வருகின்றது. 1961- 1973 காலகட்டத்தில் வளர்முக நாடகளில் தலா வருமான வளர்ச்சி 3.3 சதவீதமாக இருந்தது. 1990 களுக்குப் பிறகு 0.1 சதவீதமாக குறைந்தது. 2. பணவீக்கம் மிகவும் அதிகரித்துக் காணப்படல். இலங்கையில் பணவீக்கம் 24 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் 6 சதவீதம் இவையும் வறுமை அதிகரித்துச் செல்ல காரணமாகும். உதாரணமாக : வெளிநாட்டுப் பண வரவுகள் காணப்பட்டாலும் பணவீக்கம் காரணமாக எமது நாட்டுப் பணத்திற்கு மதிப்பற்ற நிலையே காணப்படல் . அதாவது எமது நாட்டுப் பணம் பெறுமதியற்றுக் காணபபடுகிறது. 3. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு பொருட்களின விலை அதிகரிப்பு காரணமாக தினக்கூலி மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். அதாவது பொருட்களின செலவிற்கு அவர்களின் ஊதியம் போதாமை காரணமாக மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படல்.இதவும் பூகோளமாதலின் ஓர் விளைவு ஆகும். 4. இலவசமாக இருந்த கல்வி, சுகாதாரம் பாதிக்கப்படல். ஆரம்ப காலத்தில் காணப்படட இலவச கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் வறுமைப்பட்ட மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக : அண்மைக்காலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு கொரோனா காலத்தில் காணப்பட்ட கல்வி முறையில் வறுமைப்பட்ட மாணவர்களை பெரிதும் பாதித்தது. அவர்கள் கல்வியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது இதுவும் பூகோளமாதலின் ஒரு விளைவாகும். மின்சாரம் , குடிநீர், தொலைபேசி போன்றவற்றிறகு ஒரு குடும்பம ஆகக் குறைந்தது மாதாநதம் 5-7 ஆயிரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பூகோளமயமாதலின் கீழும் 70 சதவீதமான வளங்களை 30 சதவீதமானவ்கள் அனுபவிக்கின்றனர். உலக சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயே வாழ்கின்றனர். அவர்களிற்கு குடிப்பதற்கான சுத்தமான நீரே கிடைப்பதில்லை. ஒரு சிறு எண்ணிக்கையினரின் ஆடம்பர வாழ்க்கைக்காக பெரும் எண்ணிக்கையானவர்களை மேலும் வறுமைக்கும் பொருளாதார கடன் சுமைகளிற்கும் தள்ளுவதையே பூகோளமயமாதல் செய்கிறது. இவ்வாறு பூகோளமயமாதல் காரணமாக வறுமை அதிகரித்துச் சென்றாலும் ஓரளவு குறைவடைகின்றது என்பதம் மறுக்க முடியாத உண்மையே ஆகும். 1. அன்னிய செலவாணியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல் அதாவது வறிய குடும்பங்களில் பிறந்தவர்களில் ஒரு அங்கத்தவராயினும் வெளிநாடுகளிற்குச் சென்று பணம் அனுப்புவதன் காரணமாக தமது வாழ்க்கை முறையை ஓரவிற்கு எனினும் மாற்றக் கூடியதாக இருத்தல். 2. பொருட்கள் ஏற்றுமதி செய்யபபடல். உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்களிற்கு இலாபத்தையும் வருமானத்தையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல். உதாரணமாக : பனங்கிழங்கு , ஓலைகளில் செய்யப்பட்ட பொருட்கள் 3. வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருதல். வேறுநாடுகள் ( அமெரிக்கா போன்ற நாடுகள் ) தமது கிளை நிறுவனங்களை எமது நாடுகளிலும் ஸ்தாபித்து அங்கு அதிகளவிலான தொழிலாளர்களை அமர்த்தி அவர்களிற்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல். இவற்றின் மூலம் வறுமை ஓரளவு குறைவடைவதுடன் வேலையற்ற தன்மையும் குறைவடைதல். இவ்வாறு மக்களின் வாழ்க்கை வட்டம் ஓரளவு அதிகரித்ததுடன் வறுமை குறைவடைந்து செல்லும் போக்கை காண முடிகின்றது. பூகோளமயமாக்கலின் காரணமாக வறுமை அதிகரிக்கும் அதேவேளை குறைவடைந்தும் செல்கிறது. இருப்பினும் பூகோளமயமாதலின் காரணமாக வளர்முக நாடுகளும் மக்களும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை