https://youtu.be/efxxgLFxb1Y https://youtu.be/efxxgLFxb1Y
Posts
சுயதொழில் முயற்சியாளராக 80 வயதுப் பாட்டி
- Get link
- X
- Other Apps
எனக்கு இப்பொழுது 80 வயசு இருந்தும் நான் உழைத்தால்தான் என் குடும்பத்தின் பசியைப் போக்க முடியும். முப்பது வருடமாக மாம்பழம் விற்று எனது வாழ்க்கையை நடாத்தி வருகின்றேன். நாட்டில் நிலவக்கூடிய பொருளாதாரப் பிரச்சினையால் வருமானம் குறைவாகத்தான் கிடைக்கிறது. பெற்றோல் பிரச்சினையால் மல்லாவியில் இருந்து மாம்பழங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்வது கடினமாகத்தான் இருக்கிறது. எனக்கான போக்குவரத்துக் காசு தவிர்த்து மாம்பழம் கொண்டு வருவதற்கு மட்டும் ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும். காலையில் 9 மணிக்கு வந்து பின்னேரம் 5 மணிக்கு தான் போவேன். அதுவரைக்கும் இந்த வெயிலுக்கு ஒதுங்கி ஒதுங்கி இருக்கிறது தான் பிள்ளை. மதியச் சாப்பாடு கொண்டு வந்து பருப்புகறியும் சோறும் சாப்பிட்டேன். சரியம்மா! வைத்தீஸ்வர நாதன் உங்களுக்கு அருள் புரிவார். போயிட்டு வரேன் அம்மா . சரி பிள்ளை! சந்தோசம் !☺
யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து
- Get link
- X
- Other Apps
யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிக அளவிலான மோட்டார் வாகன விபத்துக்கள் இளைஞர்கள் மூலமாகவே இடம்பெற்று வருவதை நாளாந்தம் பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றோம் . மோட்டார் வாகன வீதி விபத்தானது போதைப் பொருள் பாவனைகள், சாலை விதிமுறைகளை மீறுதல் போன்றவற்றின் மூலம் இடம்பெறுகின்றது. அந்தவகையில் தற்கால இளைஞர்கள் சமூகப் பார்வையை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் அவசர தேவைகளுக்காகவும் வீதி விதிமுறைகளை மீறி சாலைகளில் கடுகதியில் செல்கின்றனர் . இதன் காரணமாக அவர்களும் வீதியில் செல்பவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர் . வீதி விபத்துக்களினால் ஒவ்வொரு 24 மணித்தியாலத்திற்கும் 8 பேர் இறக்கின்றனர் என News 1st (2 Jan, 2022) மூலம் அறிய முடிகின்றது. உதாரணமாக யாழ் பிராந்தியப் பத்திரிகையில் வெளியான முதற் பக்கச் செய்தியாக "மோட்டார் வாகனத்தில் கடுகதியில் சென்ற இளைஞர் பலி " மற்றும் "மோட்டார் வாகனம் மோதியதில் குடும்பப்பெண் பாதிப்பு " இவ்வாறான செய்திகளை தினமும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது...
யாழ்ப்பாணமும் அதிகரித்த மோட்டார் வாகன வீதி விபத்து
- Get link
- X
- Other Apps
மனித உயிர் என்பது இழந்தால் மீளப்பெற முடியாத ஒரு விடயமாகும்.அண்மைகாலமாக இத்தகைய உயிர்களின் நிலைத்திருப்புத் தன்மை என்பது குறைவடைந்து செல்கிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மோட்டார் வாகன வீதி விபத்து அனைவராலும் பேசப்படுகின்ற பேசு பொருளாக மாறிவருகிறது. இலங்கையில் யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிக அளவிலான மோட்டார் வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருவதை நாம் நாளாந்தம் பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றோம் . யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூக, பொருளாதார ரீதியில் விருத்தியடைந்த ஒரு மாவட்டமாக இருந்தபோதிலும் வீதி விபத்துக்கள் சர்வ சாதாரணமான விடயமாகவே காணப்படுகிறது. இவ்வீதி விபத்தானது பல வழிகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக இளைஞர்கள் மூலமே இந்த வீதி விபத்தானது அதிகளவாக இடம்பெறுவதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. மோட்டார் வாகன வீதி விபத்தானது பல காரணங்களின் மூலம் நடைபெறக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் போதைப் பொருள் பாவனைகள், சாலை விதிமுறைகளை மீறுதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை குறிப்பிடமுடியும். அந்தவகையில்...