சுயதொழில் முயற்சியாளராக 80 வயதுப் பாட்டி








எனக்கு இப்பொழுது 80 வயசு இருந்தும் நான் உழைத்தால்தான் என் குடும்பத்தின் பசியைப் போக்க முடியும். முப்பது வருடமாக மாம்பழம் விற்று  எனது வாழ்க்கையை நடாத்தி வருகின்றேன். நாட்டில் நிலவக்கூடிய பொருளாதாரப் பிரச்சினையால் வருமானம் குறைவாகத்தான் கிடைக்கிறது.

பெற்றோல் பிரச்சினையால் மல்லாவியில் இருந்து மாம்பழங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்வது கடினமாகத்தான் இருக்கிறது. எனக்கான போக்குவரத்துக்  காசு தவிர்த்து மாம்பழம் கொண்டு வருவதற்கு மட்டும் ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும். 

காலையில் 9 மணிக்கு வந்து பின்னேரம் 5 மணிக்கு தான் போவேன். அதுவரைக்கும் இந்த வெயிலுக்கு ஒதுங்கி ஒதுங்கி இருக்கிறது தான் பிள்ளை. மதியச் சாப்பாடு கொண்டு வந்து பருப்புகறியும்  சோறும்  சாப்பிட்டேன். 

சரியம்மா! வைத்தீஸ்வர நாதன் உங்களுக்கு அருள் புரிவார். போயிட்டு வரேன் அம்மா .

சரி பிள்ளை! சந்தோசம் !☺

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை