தொடர்பாடலின் வகைகள்
தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை கடத்துவதாகும்.இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்து. தொடர்பாடல் நடைபெறுவதற்கு மொழி என்பது அவசியமான ஒன்றாகும்.பேச்சு,எழுத்து மற்றும் குறியீடுகள் மூலமும் தொடர்பாடலானது நடைபெறுகினறது.இத்தகைய தொடர்பாடலானது முக்கியமாக 04 வகைப்படும். 1. அகத் தொடர்பாடல் 2. ஆளிடைத் தொடர்பாடல் 3. குழுத் தொடர்பாடல் 4. வெகுஜன தொடர்பாடல் அகத் தொடர்பாடல் என்பது தனிமனிதனிற்குள் ஏற்படும் தொடர்பாடலாகும்.அதாவது தனிமனிதன் தன்னிலை சார்ந்து தனக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்துவதாகும். இவ் அகத் தொடர்பாடலால் சாதகமான விளைவுகளும் பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன. சாதகமான விளைவு எனும் போது தனிமனிதன் தன்னைத் தானே அறிந்து கொண்டு தன்னுடைய நிறை குறைகளை அறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உதவுதல். அகத் தொடர்பாடலால் ஏற்படும் தீமைகளாக சரியான தீர்மானம் எடுக்க முடியாத போது தவறான பாதைக்குள் தள்ளப்படுவதுடன் மன உளைச்சலுக்கும்ஆளாதல் ஆளிடைத் தொடர்பாடல் என்பது இரு நபர்களிற்கிடையில் ஏற்படுவதாகும். இது தற்காலத்தில் தொலைபேசிகளிலேயே அதிகம் இடம் பெறுகின்றது. குழுத் தொடர்ப...
Comments
Post a Comment