தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை கடத்துவதாகும்.இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்து. தொடர்பாடல் நடைபெறுவதற்கு மொழி என்பது அவசியமான ஒன்றாகும்.பேச்சு,எழுத்து மற்றும் குறியீடுகள் மூலமும் தொடர்பாடலானது நடைபெறுகினறது.இத்தகைய தொடர்பாடலானது முக்கியமாக 04 வகைப்படும். 1. அகத் தொடர்பாடல் 2. ஆளிடைத் தொடர்பாடல் 3. குழுத் தொடர்பாடல் 4. வெகுஜன தொடர்பாடல் அகத் தொடர்பாடல் என்பது தனிமனிதனிற்குள் ஏற்படும் தொடர்பாடலாகும்.அதாவது தனிமனிதன் தன்னிலை சார்ந்து தனக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்துவதாகும். இவ் அகத் தொடர்பாடலால் சாதகமான விளைவுகளும் பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன. சாதகமான விளைவு எனும் போது தனிமனிதன் தன்னைத் தானே அறிந்து கொண்டு தன்னுடைய நிறை குறைகளை அறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உதவுதல். அகத் தொடர்பாடலால் ஏற்படும் தீமைகளாக சரியான தீர்மானம் எடுக்க முடியாத போது தவறான பாதைக்குள் தள்ளப்படுவதுடன் மன உளைச்சலுக்கும்ஆளாதல் ஆளிடைத் தொடர்பாடல் என்பது இரு நபர்களிற்கிடையில் ஏற்படுவதாகும். இது தற்காலத்தில் தொலைபேசிகளிலேயே அதிகம் இடம் பெறுகின்றது. குழுத் தொடர்ப...
21 ஆம் நூற்றாண்டில் பூகோளமயமாதலானது பரந்து விரிந்து காணப்படுகின்றது. இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. இப் பூகோளமயமாதலானது 1980 களிலிருந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகவும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரிட்டன், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலேயே இச் சிந்தனை முதன் முதலாக தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். பூகோளமயமாதல் என்ற பதத்தை பொருளியலாளர்கள் 1981 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் என “தியோடோர் லெவிட் “ (Theodore Levitt) என்பவர் எழுதிய “ சந்தைப் பூகோளமயமாக்கல்” ( Globalization Of Market) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பூகோளமயமாதல் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. அந்தவகையில் இளம் தலைமுறையினர் அதிகமாக குழப்பப்படுகின்றனர். அவர்கள் பூகோளமயமாதல் மனித சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளதாக நம்புகின்றனர். இதனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் என்பன எட்ட முடியாத வறிய நாடுகளிற்கும் எட்டி ...
அச்சுகலை நுட்பங்கள் காலத்திற்கு காலம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளன. அச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும் தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும். அச்செழுத்துக்களை வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும் வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர். பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன், அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை. இக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக் கலைஞர்...
Comments
Post a Comment