பரவி வரும் டெங்கு நோயும் அதிலிருந்து எம்மை பாதுகாத்தலும் டெங்கு எனப்படுவது ஒரு வகை வைரஸ் கிருமி.இது நுளம்புகள் மூலம் மனிதர்களிற்கு பரவி நோயுண்டாக்குகிறது.டெங்கு காய்ச்சல் இன்று வேகமாக பரவி வருகிறது எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நாடு முழுவதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பரவுகிறது.குறிப்பாக வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை காணுகின்றோம்.வைத்தியசாலைகளிற்கு அநேகமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே வருகை தருவதை காண முடிகின்றது.எம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். எவ்வாறு பரவுகிறது? ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள பகலில் கடிக்கும் நுளம்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த நுளம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து மற்றவர்களிற்கு பரப்புகிறது.இந்த நுளம்பு அநேகமாக மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களாக பூச்சாடிகள்,பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கி...