யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற ஈரான் -இலங்கை நட்புறவுத் திரைப்பட விழா
யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் ஈரான் -இலங்கை நட்புறவு திரைப்பட விழா நவம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
8ம் திகதி காலை 10 மணி அளவில் கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அலுவலர் மகாகமகே அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து சிரேஷ்ட எழுத்தாளர் ஜேசுராஜா அவர்களும் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து முதலாவது திரைப்படமாக சர்வதேச விருது பெற்ற "ராணாவின் மெளனம் " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.திரைப்பட நிறைவின் பின் திரைப்படம் பற்றிய கருத்துக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் "வீ காவ் எ கெஸ்ற்" என்ற திரைப்படமும் மறுநாள் காலை 10 மணிக்கு "கொக்கற்ரி" என்ற திரைப்படமும் பிற்பகல் 3 மணிக்கு "சீசன் ஒவ் நர்கீஸ்" என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது .
இந்நிகழ்வின் பின்னர் இத் திரைப்பட நிகழ்வு பற்றியும் திரைப்படங்கள் பற்றிய கருத்துக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள்,ஊடகத்துறை மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment