வாக்களிப்பது உங்கள் உரிமை
வாக்களிப்பது உங்கள் உரிமை
வாக்களிப்பது உங்கள் ஒவ்வொருவருடைய உரிமையும் பொறுப்பும் ஆகும்.வாக்காளர் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பியவாறு இரகசியமாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க முடியும்.நீங்கள் வாக்களிப்பதனை தடுக்கவோ இடையூறு செய்யவோ எவராலும் முடியாது,உங்களால் அளிக்கப்பட்ட வாக்கு யாருக்கானது என்பதை எவராலும் எச் சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள முடியாது.
தமிழ் மக்களாகிய நாம் எமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவர் யார்?பாரபட்சமின்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவர் யார்? என்பவற்றை தெளிவாக கணிப்பிட்டு வாக்களியுங்கள்.
ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்கினை நாளைய தினம் சனிக்கிழமை காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்களிக்க முடியும்.கால தாமதமின்றி நேர காலத்துடன் உங்களது வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று வாக்களியுங்கள்.
வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது உங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வது கட்டாயமானது. இதற்கென தேசிய அடையாள அட்டை,செல்லுபடியான கடவுச் சீட்டு ,செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம்,முதியோர் அடையாள அட்டை, அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொரு ஆளடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
உங்களுடைய வாக்கின் மூலமே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவே வாக்களிப்பது உங்கள் உரிமையும் பொறுப்புமாகும். எனவே தவறாது சரியான முறையில் வாக்களித்து வாக்குரிமையை பாதுகாப்போம்.
இது தொடர்பாக உங்கள் குடும்ப அங்கத்தவர்கள்,அயலவர்கள்,நண்பர்களிற்கு தெளிவூட்டி சரியான தலைவரை தேர்ந்தெடுப்போம்.

Comments
Post a Comment