ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் செயலமர்வு - 2019

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட துறையின் ஏற்பாட்டில் "ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் செயலமர்வானது நேற்று 03.12.2019 செவ்வாய்கிழமை வலம்புரி விருந்தினர் விடுதியில் காலை 10மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது.

நேற்று காலை 10மணி அளவில் மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் குமரேந்திரன் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இவர் சுகாதாரமான வாழ்வு பற்றியும் சுகாதாரமான உணவுப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  உரையாற்றினார்.

இவரை தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துவாரகா  சூழல் சார்ந்த புகைப்படங்களை திரையிட்டு எமது யாழ் நகரம் எதிர்கொள்ளக் கூடிய சூழல்சார் பிரச்சினையை குறிப்பிட்டு முறையான திண்மக்கழிவு முகாமைத்துவம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் உணர்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் குமரன் ஆரோக்கியமான கிராமத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாகவும் சுகாதாரமான வைத்தியசாலையின் சூழலமைவு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய கருத்துகளையும் முன்வைத்தார்.

இச்செயலமர்வின் பிரதான நோக்கமாக இது தொடர்பான விழிப்புணர்வை ஊடகவியலாளர்கள் ஊடாக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனவே தான் இச்செயலமர்வு ஊடகவியலாளர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச் செயலமர்வில் ஊடகவியலாளர்கள்,அறிவிப்பாளர்கள் மற்றும்  யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை