போதைப் பொருள் விழிப்புணர்வு செயலமர்வு 2019

போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு கடந்த தினம் (10.12.2019) செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது நிகழ்ச்சி  அதிகாரியாகிய ரஹீம் மற்றும் உதவி நிகழ்ச்சி  அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் போதைப் பொருள் என்பது யாது? போதைப் பொருளிற்கு எவ்வாறு அடிமையாகின்றனர் எனவும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் என்பன இந் நிகழ்வின் போது கூறப்பட்டது.

இலங்கைக்கு போதைப் பொருட்களினால் கிடைக்கின்ற வருமானம் குறைவாக உள்ள போதிலும் விநியோகிப்பது கவலையான ஒரு விடயமாக உள்ளது. இதனால் பாமர மக்கள்  அதிகம் பாதிக்கப்படுவதுடன் அதிகளவிலான பணத்தை போதைப் பொருளிற்கு செலவிடுகின்றனர் எனவும் விளம்பரங்கள் போதைப் பொருள் பாவனையை அதிகம் தூண்டுகின்றன எனவும் ரஹீம் குறிப்பிட்டார்.

மேலும் இப் போதைப் பொருள் பாவனையை தடுக்க ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்  ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை