சிறுவர் உரிமைகள்  மாநாடு- 2019 

சிறுவர் உரிமைகள்  மாநாடு நேற்றைய தினம் (23.12.2019)காலை 9.00 தொடக்கம் மாலை 6.00 வரை ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில்  CCH அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்தின்  30 ஆவது வருட நிறைவில் "ஆரோக்கியமான,பாதுகாப்பான சிறுவர் பராயத்திற்காகப் பங்கெடுப்போம் " என்ற தொனிப்பொருளில் இம் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில்
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார், மற்றும் சிறுவர் நலம்சார்ந்த உத்தியோகத்தர்கள், மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

சிறுவர் பாதுகாப்பு,சிறுவர் உடல் ஆரோக்கியம்,சிறுவர் உள சமூக ஆரோக்கியம், சிறுவர்களிற்கான நட்புறவு சூழல்,சிறுவர்களிற்கான ஓய்வும் பொழுதுபோக்கும்,சிறுவர்களின் கல்வி உரிமை,முன்பிள்ளைப் பருவ விருத்தி,விசேட தேவை உடைய சிறுவர்களிற்கான வாய்ப்புக்கள்,சிறுவர் பங்கேற்பு இவ் விடயங்கள் தொடர்பான சவால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்பனவும் கலந்துரையாடலின் மூலம் முன்வைக்கப்பட்டன.

சிறுவர்களிற்கான அனைத்து உரிமைகளும் கிடைக்கப் பெற வேண்டும் என இக் கலந்துரையாடலின் மூலம் வலியுறுத்தப்பட்டது.





Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை