யாழ்.பல்கலைக்கழகத்தில்        "கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின்  ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை வெளியீடு நிகழ்வானது  யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் 02.12.2019 (இன்று ) பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக  கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

"நல்லவை  சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட  மாணவர்களால் உருவாக்கப்பட்ட  கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருகின்றது.  மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை ஆக்கம் பெற்றுள்ளது. 

இன்று இடம்பெறவுள்ள இச்சஞ்சிகை வெளியீடு நிகழ்வுக்கு பல்கலைக்கழக  மாணவர்களையும் ,சமூகத்தினரையும்  மற்றும் ஆர்வலர்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் யாழ்பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினர்.

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை