சிறுவர் உரிமைகள் மாநாடு
சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் 30 ஆவது வருட நிறைவை முன்னிட்டு சிறுவர் உரிமைகள் மாநாடு 23ம் திகதி ரில்கோ நகர விடுதியில் காலை 9.00மணியவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது சி.சி.எச் centre for children's happiness (Get)Ltd நிறுவனத்தின் ஏற்பாட்டில் குளோபல் மார்ச் இன் அனுசரணையுடன் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் , வடமாகாண மற்றும் யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்,தலைவர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாண ஆணையாளர் ரி.விஸ்பரூபன் இயக்குனர் சிறுவர் பாதுகாப்பு வைத்தியர் கோபித்,சி.சி.எச் நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.ரி.மயூரன், சட்ட வல்லுனர் தற்பரன்,மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மாவட்ட இணைப்பாளர் மனோகரன்,திணைக்கள பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள், நிறுவன இயக்குனர்கள்,பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சி.சி.எச் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக சிறுவர்களுக்கான ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலையும் சூழ்நிலைகளையும், வாய்ப்புக்களையும்,வளங்களையும் விரிவாக்கும் கூட்டுப் பயணத்தின் எதிர்காலம் குறித்தான கலந்துரையாடலில் சிறுவர் பாதுகாப்பு,சிறுவர் உடல் ஆரோக்கியம்,சிறுவர் உள சமூக ஆரோக்கியம்,சிறுவர்களுக்கான ஓய்வும் பொழுதுபோக்கும், சிறுவர்களின் கல்வி உரிமை,முன் பிள்ளைப் பருவ விருத்தி,விசேட தேவை உடைய சிறுவர்களிற்கான வாய்ப்புகள்,சிறுவர் பங்கேற்பு என்னும் சிறுவர் உரிமைகள் இதன் போது முன்னுரிமை வழங்கப்பட்டு அதற்கான சவால்கள்,தீர்வுகள் ,அதற்கான முயற்சிகள் என்பன வளவாளர்கள் மூலம் கருத்தமர்வாக இடம்பெற்றது.
Comments
Post a Comment