மூத்த ஊடகவியலாளர் அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் 

மூத்த ஊடகவியலாளர் அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களின் 31 ஆவது நினைவு தினமானது இன்று 11மணியளவில் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நினைவு தின நிகழ்வை யோசப்பாலா தலைமை தாங்கி நடாத்தினார்.


அகவணக்கம்,இறைவணக்கம்,மங்கள விளக்கேற்றுதல் அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் குடும்பத்தார்,ஊடகவியலாளர்கள், மற்றும் யாழ்.பல்கலைக்கழக  ஊடகத்துறை மாணவர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.பெருமாள் அவர்களுடனான அனுபவப் பகிர்வை அனந்தன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.இதன் போது பெருமாள் அவர்கள் மும்மொழியிலும் சிறந்தவர் என்றும் மொழி பெயர்ப்பு, இலகுநடை போன்றவற்றை தனக்கு அறியத்தந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

பி.எஸ்.பெருமாள் அவர்கள் ஊடகத்துறையில் பணியாற்றினார் எனவும் "நடந்தபடி தேடுவோம்" என்ற கவிதை நூலில் "வேர்விட்ட விருட்சம்" என்ற தன்னிலைப்பட்ட கவிதை எழுதி இருந்தார் எனவும் தன்னுடைய அனுபவப் பகிர்வை வேல்ரஞ்சன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கைகள்  தலைவர் கலாநிதி சி.ரகுராம் அவர்களும் அவருடனான அனுபவப் பகிர்வை பகிர்ந்து கொண்டார்.

பி.எஸ்.பெருமாள் அவர்கள் பத்திரிகை துறை ஆசிரியர் மாத்திரமல்லாமல் சிறுகதை ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 55 வருடங்கள் ஊடகத்துறையில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை