அந்த அழகிய மாலை நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் நான்
ஆம்,அந்த அழகிய மாலை நேரம் கோப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை வீதியில் வாகன இரைச்சலிற்கு மத்தியில் இரசித்த வண்ணம் ஜன்னலோர இருக்கையில் இருந்தபடி இரசித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது கல்வியன் சந்தி கழிந்து விட்டது.நானோ பாடலை இரசித்தபடி, எனதருகே ஒரு பெண்ணின் சிணுங்கல் ஒலி கேட்டது. பாடலை கேட்பதில் இருந்த கவனம் கலைந்தது சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரென்று புரியவில்லை. மீண்டும் பாடல் மீது எனது கவனம் .
இப்போது தொலைபேசியின் அழுகுரல் அந்த பேருந்து முழுவதும் கேட்கிறது. எல்லோர் பார்வையும் அந்த தொலைபேசியின் அழுகுரலிற்கு சொந்தக்கார பெண் மீதே உள்ளது. அப்போது தான் புரிந்தது பெண்ணின் சிணுங்கல் அல்ல அது அழுகுரல் என்பது.
தொலைபேசியை காதில் வைக்கிறாள் அந்தப் பெண்மணி "என்னாச்சு என்ன நடந்த சொல்லுமா தெளிவா" மறுபுறத்தில் அழுகுரல் மட்டுமே கவலை பொங்கிட வார்த்தை வரவில்லை தாய் மனத்திற்கு. தொடர்பாடல் துண்டிக்கப்படுகிறது.
மறுபடியும் தொலைபேசியின் அழுகுரல் தாய்வழி உறவினர் யாரோ "அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்"அந்த பெண் பேருந்தில் இருக்கும் கண்கள் அனைத்தும் தன்னை நோக்கும்படி அழுகிறாள்.
பாடல் ரணமாக ஒலிக்கிறது எனது காதுகளில் பேருந்து இப்போது நல்லூர் கந்தன் கோவில் மணியோசை கேட்டபடி நகர்ந்து செல்கிறது. பேருந்து நகர்வதற்கிடையில் எனது மனம் நல்லூர் கந்தன் முன்னே மண்டியிடுகிறது அந்த பெண்ணின் அழுகுரலிற்காக...
அருமையான பதிவு.......
ReplyDeleteThanks you so much 😊
Delete