ஓடு தம்பி ஓடு.
******************
கதிரவரன் நெருங்கி வந்து
வெப்பக் கதிர்களால் தாக்குகிறான்
கடுகதியில் ஓடு தம்பி ஓடு

காடழிந்து வெப்பம் உயர்ந்து
பனி மலைகள் உருகி
கடல் மட்டம் உயர்கிறது ஓடு தம்பி ஓடு.

ஆழ்கடலில் அணுவாயுதப் பரிசோதனையாம் அதனால் ஆழிப் பேரலை
துரத்துகிறது ஓடு தம்பி ஓடு.

ஆழ்துளைக் கிணறுகள் ஏராளம்
அதனால் நன்னீரெல்லாம் உவராகிறது
நன்னீர் தேடி ஓடு தம்பி ஓடு

ஆளுக்கொரு வாகனமாம்
அதனால் அதிகமாய் வளி மாசடைகிறது
நல்ல வளி தேடி ஓடு தம்பி ஓடு.

காடுகளைத் தின்று விட்டான் மனிதன்
அதனால் பூமியெங்கும் கட்டிடக் காடுகளாம் காடுகள் தேடி ஓடு தம்பி ஓடு.

பசுமை தின்ற பாரினிலே
காபனீரொக்சைட் அதிகரிக்கின்றது
உயிர்வாழ ஒட்சிசன் தேடி ஓடு தம்பி ஓடு.

இயற்கை தின்று வாழாமல்
இயற்கையோடு நேசமாய் வாழும்
வழிதேடி ஓடு தம்பி ஓடு.

உலகம் நிலைத்து 
உன் சந்ததி வாழ 
பசுமை உலகம் தேடி
ஓடு தம்பி ஓடு.

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை