மனிதம் இறக்கவில்லை…….



சிறுவர்களுக்கு இன்றைய சமூகத்தில் காணப்படும் சவால்களுக்கு மத்தியிலும், சமூகங்களிலுள்ள பல விடயங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் இயற்கை மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையையும், பொறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தவும் சமூகத்தின் மறு பக்கங்களையும் பார்த்து உணரக்கூடிய வகையில் இயற்கை ஊக்குவிப்பு கழகத்தின் கள விஜயம் அதிபர் தலைமையில் அமைந்திருந்தது.

யாழ் திருக்குடும்ப கன்னியர் மட NAC மாணவிகளால் தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலை சுற்றாடலிலுள்ள பொலுத்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாணவிகளாலும் நோயாளர்களுக்கு பரிசுபொருட்களும் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்கள். மேலும் சிறுவர் இல்லத்திற்கும் சென்று அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டார்கள்.

சிறுவர்கள் சமூக, சூழல் சவால்களுக்கு பிரதிபலிப்பு மிக்கவர்களாக செயற்படும் வாய்ப்புக்கள் அவர்கள் மத்தியிலும் அவர்களால் உதவி பெறுபவர்கள் மத்தியிலும் மிக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்..




Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை