தமிழன் பெருமை கூறும் தமிழ்மொழி
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய தமிழ் மொழி எங்கள் உயிர் மொழி" உலகம் போற்றும் எங்கள் தாய் மொழியே உனக்கு உண்டோ இணையாக உலகில் வேறு மொழி.
மொழித்துணையின்றி மூவகை சுட்டொலிகளில் இருந்து சொற்கள் தோன்றியமையே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும்.இத் தமிழினதும் தமிழனினதும் பிறப்பிடம் குமரிக்கண்டமே. மனிதனாக மருவிய இனம் பேசிய முதல் மொழி இத் தமிழ் மொழியே.
நாகரிகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள் இவர்கள் தமக்கென ஓர் பண்பாடு, கலாச்சாரத்தை உருவாக்கி கட்டுக் கோப்பாக வாழ்ந்தனர். இவர்களே உலகிலேயே ஓர் மொழியை இனம் என்று கூறும் கூற்றை உருவாக்கினர். தமிழர்கள் "ஓர் பிரிவினர்களல்ல மனித இனத்தின் ஆணி வேர்" ஆவர்.
வீரமாமுனிவர் அமைத்த வீரத்தமிழ் 15 ம் நூற்றாண்டு அளவிலேயே தற்காலத் தமிழிற்கு மிக நெருங்கிய எழுத்து வடிவம் பெற்றது."மொழிக்கு மட்டுமன்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவன் தமிழன்" உலகின் முதல் மொழியாக நம் தாய்மொழி "உலக தமிழ் செம்மொழி" தோற்றம் கி.மு 50000 காலப்பகுதியில் ஆகும்.
எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடிகளில் எழுதி வந்த காலகட்டத்தில் இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் முதல் அச்சு நூலான "கார்டிலா" தோன்றியமை தமிழிற்கும் தமிழனிற்கும் உண்மையிலேயே பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.இக் கார்டிலாவிலிருந்து தோன்றிய தமிழின் வரலாறு "காலக் கறையான்கள் அரிக்கும்படி விட்டுவிடக் கூடாது" என்கிறார்கள் தமிழறிஞர்கள் ஆதங்கத்தோடு.
உலகம் போற்றும் எங்கள் தாய் மொழிக்கு பங்கம் என்பது ஒட்டு மொத்த தமிழனிற்கும் பங்கம் விளைவிப்பதாக உள்ளது. ஹோட்டலில் தமிழில் பேசுவது தடை, பெயர்ப்பலகைகள் தமிழில் பொறிப்பது தடை இன்னும் எத்தனை தடைகளோ நாட்டின் தேசியகீதம் சுதந்திர சதுக்கத்திலே முதன்முதலாக தமிழ்மொழியிலேயே பாடப்பட்ட இம் மொழிக்கே பங்கம் என்பது கவலைக்குரியதாகும்.
தமிழர் தம் வரலாறு தமிழ்மொழியின் வரலாற்றிலேயே எனவே தமிழ்மொழியின் நிலைப்பு என்பது எமது நாட்டிலும் உலக நாட்டிலும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் என்றாலே அழகு, இளமை, இனிமை எனவே மூன்றும் மழுங்காத வண்ணம் தமிழ் உயிர்த் துடிப்புடன் இருப்பது என்பது அவசியம்.
"தமிழ்மொழி ஒருநாள் உலகை ஆளும்" எனும் வாசகம் உலகளவில் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கிறது.

Nz
ReplyDeleteநன்றி 😊😊
Deleteம்ம்...தமிழ் என்பது எப்போதுமே எமது அடையாளம் அதை பேசுவதற்கு தயங்க கூடாது..
ReplyDeleteநிச்சயமாக❤
Deleteதமிழின் பெருமை அழகாக சொல்லப்பட்டுள்ளது
ReplyDeleteதமிழ் என்றாலே அழகு தானே😊😊❤
Deleteஎங்கள் மொழி தமிழ் மொழி
ReplyDeleteஆமாம் நண்பரே😊👍
Deleteசிறப்பான பதிவு
ReplyDeleteநன்றிகள்😊😊
DeleteNice
ReplyDeleteநன்றி 😊😊❤
Deleteநன்றி 😊😊❤
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பு👌
ReplyDeleteநன்றி😊❤
Deleteதமிழ் வாழ்க
ReplyDeleteநிச்சயமாக 😊😍
Deleteநிச்சயமாக 😊😍
Deleteநிச்சயமாக 😊😍
DeleteSuper
ReplyDeleteநன்றி 😊😊❤
DeleteNice😘😘😘
ReplyDeleteநன்றி 😊😊❤
Deleteசிறப்மான பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே 😊😊❤
DeleteSuperb nimmu
ReplyDelete