மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் ஓர் பார்வை மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படமானது மலைவாழ் மக்களின் நிய வாழ்க்கையையும் அவர்களது வாழ்வியலையும் அவர்களது துயரங்கள், துன்பங்கள் என்பவற்றையும் வெளிப்படையாக எமது கண்டு முன் கொண்டு வந்த திரைப்படமாக இது அமைகிறது. இப் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் விஐய் சேதுபதியும் இப் படத்தின் இயக்குனராக லெனின் பாரதியும் காணப்படுகின்றனர். தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மேலுள்ள கிராமங்களிற்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமி(ஆண்டனி ) படத்தின் நாயகன். இவரின் வாழ்க்கை வழியே , அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்வதாக அமைகிறது இப் படம். சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதே ரங்கசாமியின் வாழ்நாள் கனவாக இருந்தது. அதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கின்றான். இதற்கிடையே அவரின் மாமன் மகள் ஈஸ்வரியை( காயத்ரி ) திருமணம் செய்து கொள்கிறார். அவர்களிற்கு ஒரு மகன் பிறந்து விட்டான். இவ்வாறு இருக்க அவர்களிற்கு ஒரு நிலம் கிடைத்தது. அதனை வாங்கச் செல்லும் ப...