தற்போதைய நிலைமையில் சமூக ஊடகங்கள் நன்மையாக செயற்படுகின்றதா? தீங்காக செயற்படுகிறதா?
சமூக ஊடகம் ( Social Media ) என்பதை சுருக்கமாக சொன்னால் " ஒவ்வொருவருடைய கருத்துக்களை படைக்கவும் அவற்றைப் பகிரவும் ஆக இணைக்கப்பட்ட ஒரு தளம் தான் சமூக ஊடகமாகும். சமூக ஊடகங்களாக Facebook, whatsapp, viber, Instagram, Twitter, Internet, Google plus, LinkedIn. .. எனப் பல உள்ளன. இச் சமூக ஊடகங்களிற்கும் மரபார்ந்த ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களிற்கும் இடையே அதிகமான வித்தியாசம் உள்ளன.
பொதுவாக மரபார்ந்த ஊடகங்கள் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நிறுவனம் என்ன சொல்ல நினைக்கின்றதோ அதைத் தான் நுகர்வோர் அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சமூக ஊடகங்கள் தனிநபர்களினுடைய கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு செய்தியை உருவாக்குபவரும் அவற்றை பகிருபவரும் தனிமனிதராகிய நுகர்வோரே. அதனால் இச் சமூக ஊடகம் அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு ஊடகமாக தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளது.
தற்காலத்தில் Smart Phone இல்லாமல் யாரையும் காணமுடியாது என்ற நிலைக்கு உள்ளாகி விட்டோம். ஆகவே இவற்றின் மூலம் தனிநபர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகள், செய்திகள் அனைத்தையும் வேகமாக பரப்பும் தன்மையையும் மற்றவர்களது செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் தன்மையையும் காணக் கூடியதாக உள்ளது.
தற்போதைய நிலைமை என்னும் போது உலக மக்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஒரு விடயமாக Covid 19 என்றழைக்கப்படும் கொரோனா நோய் தொற்று அமைகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை இன்று வரை ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளது. இத்தகைய நிலைமையில் அரசினால் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் அனைவரது பொழுதுபோக்காகவும் Social Media உள்ளன.
மக்கள் வீடுகளில் இருக்கின்ற இச் சந்தர்பத்தில் அவர்களிற்கு தேவையான செய்திகளை வழங்குபவையாகவும் பொழுதுபோக்கு விடயமாகவும் இச் சமூக ஊடகங்கள் செயற்படுகின்றன. இச் சந்தர்ப்பத்தில் சமூக ஊடகங்கள் மக்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
உதாரணமாக :
1. கொரோனா தொடர்பான செய்திகளை மக்களிற்கு வழங்குதல் . Viber (06.05.2020)
(30.04.2020) (06.05.2020)

3. கொரோனா காலத்தில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதையும் பொருட்கள் நிர்ணய விலையில் இருந்து அதிகரிப்பதால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றமையை சுட்டிக் காட்டுதல்.
(13.04.2020)
4. மக்களின் பாதுகாப்புக் கருதி விழிப்புணர்வு செய்திகளை மக்களிற்கு வழங்குதல்
(06.05.2020)
(06.05.2020)
5. கொரோனா காலக் கொடுப்பனவுகள் பற்றியும் அவை தொடர்பான செய்திகளையும் மக்களிற்கு அறியத் தருதல்.
(03.05.2020)
6.சில ஊடகங்கள் வதந்தியை பரப்புகின்ற போதிலும் சில ஊடகங்கள் அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து மக்களிற்கு செய்தியை வழங்குகின்றன.
(06.05.2020)
7. தற்போதைய சூழலில் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை Order செய்து பெற்றுக் கொள்ள சமூக ஊடகங்கள் உதவுகின்றமை.
(01.05.2020)
இவ்வாறு சமூக ஊடகங்கள் தற்கால சூழலில் மிகவும் நன்மை செய்பவையாக இருப்பினும் மக்களிற்கு தீமையை ஏற்படுத்துபவையாகவும் அமைகின்றன. அந்த வகையில் எவ்வாறான தீமைகளை ஏற்படுத்துகின்றன என நோக்குவோம்.
உதாரணமாக :
1. சீனா தான் கொரோனா நோயை திட்டமிட்டு பரப்பியதாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றமை.
2. மருந்துகள் கண்டுபிடித்தமை தொடர்பான போலியான செய்திகளை பரப்பியமை.
(04.04.2020)
3.சீனர்களின் உணவுப் பழக்கத்தை கேவலமானது எனவும் அவர்களின் உணவுப் பழக்கத்தினாலே கொரோனா தொற்று ஏற்பட்டது எனவும் உண்மையற்ற செய்திகளை பரப்புதல்.
4. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் உடல்களை கடலில் போடுவதாகவும் இலங்கை நாட்டின் கடற்கரைகளில் வந்து ஒதுங்குவதாகவும் அதனால் கடல் உணவுகளை சாப்பிடாதீர்கள் என பொய்யான செய்திகளை பரப்புதல்.
5. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மக்களை சீனாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற போலிச் செய்தி வெளியாகியமை.
இவ்வாறு சமூக ஊடகங்கள் தற்போதைய நிலைமையில் மக்களிற்கு நன்மை செய்கின்ற அதே வேளை தீமையான விடயங்களைச் செய்கின்றமை கவலையான விடயமே எனவே சமூக ஊடகங்கள் போலியான செய்திகளை பரப்புவதை தவிர்த்து மக்களிற்கு உண்மையான செய்திகளை மாத்திரம் வழங்க முயற்சிக்க வேண்டும்.













Comments
Post a Comment