மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் ஓர் பார்வை


மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படமானது மலைவாழ் மக்களின் நிய வாழ்க்கையையும் அவர்களது வாழ்வியலையும் அவர்களது துயரங்கள், துன்பங்கள்  என்பவற்றையும் வெளிப்படையாக  எமது கண்டு முன் கொண்டு வந்த திரைப்படமாக இது  அமைகிறது.  இப் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் விஐய்  சேதுபதியும் இப் படத்தின்  இயக்குனராக லெனின் பாரதியும் காணப்படுகின்றனர்.


தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரத்தில் இருந்து மேலுள்ள கிராமங்களிற்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமி(ஆண்டனி )  படத்தின் நாயகன்.  இவரின் வாழ்க்கை வழியே , அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்வதாக அமைகிறது இப் படம்.

சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும்  என்பதே ரங்கசாமியின் வாழ்நாள் கனவாக இருந்தது. அதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கின்றான். இதற்கிடையே அவரின் மாமன் மகள்  ஈஸ்வரியை( காயத்ரி ) திருமணம் செய்து கொள்கிறார். அவர்களிற்கு ஒரு மகன் பிறந்து விட்டான். இவ்வாறு இருக்க அவர்களிற்கு  ஒரு நிலம் கிடைத்தது. அதனை வாங்கச் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.  பின்னர்  அந் நிலம்  அவனது கைக்கு கிடைத்து விட்டது.



மலையடிவார மக்களின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பான முறையிலும் ஜதார்த்தமான முறையிலும் இத் திரைப்படம் பேசுகிறது. அதாவது இயற்கை  ஒலிகளான பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் ஒலிகள் இப் படத்தின் ஜதார்த்தத்தை காட்டியது. அவர்களது நம்பிக்கைகள் , வழிபாட்டு முறை  என்பனவும் இத் திரைப்படத்தில் வெளிப்பட்டன.  அதாவது மலையடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு செல்லும் போது  கல்லொன்றை எடுத்து சென்று மரத்தின்  அடியில் வைத்து வணங்குதல். , நற்செய்தி சொன்னமைக்காக வாயில் சர்க்கரை போடுதல் போன்ற பண்புகளை காணக் கூடியதாக  இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு  அப் பகுதியின் வளர்ச்சியையும்  இத் திரைப்படம் காட்டுகிறது. நிலமற்றவனான ரங்கசாமி பாடுபட்டு வாங்கிய நிலத்தை  அரசியல் தனக்கான தந்திரத்துடன் பறித்து ப்ளாட் போட்டு காற்றாலைக்கு அந் நிலத்திற்கு சொந்தமானவனையே காவலுக்கு அமர்த்தும்  அதிகாரத்தின் ஆதிக்கத்தை  வெளிப்படுத்துகிறது.  இத்துடன்  இத் திரைப்படமானது முடிவடைகிறது.

இத் திரைப்படமானது முற்று முழுதாக சினிமா  என்ற பார்வையில் இருந்து ஜதார்த்தம் என்ற பாணியில் மலையடிவார மக்களின்  இயல்பு வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது.  இங்கு  அவர்களின் பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டமையும் சிறப்பான  ஒரு விடயமாகும்.

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை