கொரோனாவால் பாதிப்படையும் தினக்கூலி மக்கள்
உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றாக covid 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந் நோயினால் பாதிக்கப்பட்ட நபரினை தொடுவதன் மூலமும் அவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலமும் இந் நோய் பரவலடைகின்றது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய இந் நோய் தொற்று தற்போது உலக நாடுகள் அனைத்திலும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. கொரோனா ஒரு உலகளாவிய தொற்று என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும் இந் நோய் நாளிற்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக பின்தங்கிய மக்கள் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
சமூகங்களின் மையத்தை தாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற ஒன்றாக இது உருவெடுத்துள்ளது. அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். நாளாந்த தொழில் புரிந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இலங்கையை பொறுத்த வரையில் ஒன்று , இரண்டாக இருந்த கொரோனா தொற்று தற்போது அறுநூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கைக்கு சென்று கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதன் காரணமாக இலங்கை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றது.
இத் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து எமது நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது இதனால் தினக்கூலி செய்யும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட திண்டாடுவதை காண முடிகிறது.
உதாரணமாக: ஒரு நபர் என்னிடம் கூறினார் " பிள்ளை நாங்கள் தினக்கூலி செய்யிற குடும்பம் இவ்ளோ நாளும் தொழிலுக்கு போய் சேர்த்த காசு எல்லாம் முடிஞ்சு பிள்ளை 90 ரூபா விற்ற அரிசி 140 ரூபா எண்டு சொல்றாங்கள் என்ன பிள்ளை செய்யிற ஏதோ சமுர்த்தில தந்த பொருட்களும் ஏதோ அமைப்புக்கள்ள இருந்து தந்த பொருட்களும் இருக்கு அது முடிய என்ன செய்யிறதோ தெரியல " இப்படி சொல்லிவிட்டு அந்த அம்மா சென்று விட்டார்.
எமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும் எமது பாதுகாப்பிற்காகவும் பல்வேறு தரப்பினரும் பல வகைகளில் தியாகம் செய்கின்றனர். எனவே அவர்களிற்கு மதிப்பளித்து அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நாம் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.
தினக்கூலி மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் பங்களிப்பு செய்கின்றனர். தொடர்ந்தும் அவர்களிற்கு தேவையான பங்களிப்பை வழங்க வேண்டும்.

Comments
Post a Comment