உடைந்து போன மனம் 

       கமலா ஒரு குறுகிய பாதை வழியே விறகுக் கட்டை தலையில் சுமந்தபடி  ஏதோ ஒரு சிந்தனை மனதைக் குழப்ப தலையில் சுமையின் பாரம் அதிகமாகையால் தடுமாறிய படி நடந்து வந்தவள் விறகுக் கட்டை கீழே இறக்கி வைத்து விட்டு அருகிலிருந்த பனங்குற்றியில் அமர்ந்து தன்னை மறந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்.


        ஒரு குறுகிய பாதை வழியே பரந்த ஒரு பகுதிக்குச் சென்று அங்கே துள்ளிக் குதித்த  நினைவுகளுடன் அவளது கதை தொடங்குகிறது.ஒரு அழகிய கிராமத்தில் சிறிய அளவிலான வீடு ஒன்று அப்பா விவசாயி அம்மா வீட்டில் தான். இவ்வாறாக பத்து வயது நிரம்பிய கமலா வாழ்ந்து வருகிறாள். அவளது சிறிய மனதில்  எவ்வளவு ஆசை அலைகள்  அடித்திருக்கும். பட்டுப்பாவாடை சட்டை வாங்கி  அணிய வேண்டும் என்பதே அவளது பேராசை . 

      ஒரு நாள் ஏதோ பத்துப் பதினைந்தாக சேர்த்த காசில் வாங்கிய பட்டுப்பாவாடையை அணிந்த அவளது மனம் சந்தோசத்தில் துள்ளிக்குதித்த படி புல்வெளியை நோக்கி ஓடினாள்.  அங்கே அன்றைய நாள் முழுவதும் சந்தோசத்தில் கழித்தவளிற்கு வீட்டு ஞாபகம் வரவே குறுகிய பாதை வழியே வேகமாக  ஓடி வந்தவளின் பட்டுப்பாவாடையை கம்பி ஒன்று பிடித்து விட அம்மா என்று கத்தியபடி கனவிலிருந்து மீண்ட கமலா விறகுக்கட்டை தலையில்  வைத்துக் கொண்டு   வேக வேகமாக நடந்து வீட்டை அடைந்தாள். 

           வீட்டிற்குள் சென்று பார்த்தவளிற்கு அவளது பத்துப் பதினைந்தாக சேர்த்து வைத்திருந்த உண்டியல் தரையில் விழுந்து நொறுங்கிக் கிடந்தது........
                                      ???

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை