விஞ்ஞான வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும்
தோமஸ் அல்வா எடிசன் கண்டறிந்த மின்சார குமிழ் மக்கள் சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான உலகுக்குளி இட்டுச் சென்றது. லூயி பாஸ்டர் உடைய நுண்கிருமி தொடர்பான ஆய்வு மேரி கியூரி அம்மையாரின் ரேடியம் தொடர்பான ஆய்வு எல்லாம் மக்கள் சமூகத்திற்கு கிடைத்த அரிய பயன்தரும் விடயங்களாகும். மருத்துவத் துறையை மட்டும் எடுத்துக்கொண்டால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் தொற்றுநோய்களை பல தடுக்கின்றன. குழந்தைகளுக்கு முக்கூட்டு மருந்து ஏற்றுதல், போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து அளித்தல் என்பவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்பம் என்று சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றது. தொடர்பாடல் துறையிலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மக்களுக்கு இன்று பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.தொடர்பு சாதனங்களின் அதிகரிப்பும் விஞ்ஞானத்தின் விளைவு எனலாம்.தொலைபேசி, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம், தொலைநகல், வீடியோ சாதனங்கள் முதலியன கல்வி வளர்ச்சிக்கும் சமூக பயன்பாட்டிற்கு உதவுகின்றன. போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் உச்சகட்ட பயன்பாட்டை இன்று மக்கள் சமூகம் பயன்படுத்தி வருவதை காணலாம். நீராவி இயந்திரம் என்பவற்றின் மூலம் பயணம் செய்த மக்கள் இன்று அதன் துரித வளர்ச்சியினால் அதிவேகமாக செல்லும் சூப்பர்சோனிக், ஜெட் விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவையெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பயனே ஆகும்.
மருத்துவத் துறையில் இன்று மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதென்றால், அதற்கு விஞ்ஞான வளர்ச்சியை காரணமாகும்.இதய மாற்று சிகிச்சை, இரவல் சிறுநீர்ப்பை பொருத்துதல், ஸ்கேனர் மூலம் நோய்களை கண்டறிதல், பரிசோதனை குழாய் மூலம் கருவியை உண்டாக்குதல் போன்ற நவீன முறை களுக்கெல்லாம் விஞ்ஞானமே வித்திட்டுள்ளது. சமூகத்திற்கு பயன் தரும் பல்வேறு மருத்துவ பணிகளுக்கும் வித்திட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன்படும் பல்வேறு மருத்துவ பணிகளுக்கும் விஞ்ஞான மூலகாரணமாக விளங்கி வருகின்றது.
இவை மட்டுமன்றி புதியதோர் உலகினை காணவும, விண்வெளியில் உலா வரவும் விஞ்ஞானம் இன்று வழிகோலியுள்ளது.செயற்கைக்கோள்களை விண்ணில் பவனிவர செய்யவும் விஞ்ஞானம் இன்று வழிகாட்டுகின்றது.விண்வெளி ஆய்வுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. விண்வெளிக்கு மனிதன் சென்று வரவும் வேறு கோள்களைப் பற்றி அறிந்துகொள்ள விஞ்ஞானம் உதவுகின்றது.
சமூகத்தின் பயன்பாட்டுக்கு விஞ்ஞானம் பெரிதும் உதவுகின்றது . இணையம் மூலம் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது முன்பின் தெரியாதவர்கள் கூட இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய வாய்ப்பு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் நவீனமயமான இந்த உலகத்திற்கு கிடைத்துள்ளது மிகப் பெரிய வரமாகும்.
Comments
Post a Comment