இலங்கையும் தொழில்நுட்பமும்


https://youtu.be/YiP9KKeSL4Y

இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பமானது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிகப் பெரிய அளவில் தொழில் புரியும் பல்தே சியக் கம்பெனியிலிருந்து சாதாரண பெட்டிக் கடை வியாபாரம் வரைக்கும் தொழில்நுட்பத்தின் தாக்கம் உருவாகியுள்ளது.  இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாமல் அதாவது தொழில்நுட்பத்தின் பயன்பாடு இல்லாமல் எந்தவொரு தொழில் முயற்சிகளையும் கொண்டு நடாத்த முடியாது என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. இவ்வாறான தொழில்நுட்பமானது வியாபாரச்  சூழலில் செல்வாக்கு செலுத்தி வியாபாரச் சூழலில் பல்வேறு கட்ட மாற்றத்தினை உருவாக்கியுள்ளது .

மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு மனிதர்கள் தமது வாழ்வுக்காக பல்வேறுபட்டவற்றினைப் பயன்படுத்தியுள்ளார்கள். தமது சூழலிருந்தே தமக்கு தேவையானவற்றை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எனினும் சமூகம் விரிவடைந்ததோடு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வனவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.  ஆரம்ப காலத்தில் தமக்கு தேவையானவற்றை தாமே  உற்பத்தி செய்து கொண்டனர் . பின்னர் தமக்கு மிகச்சிறப்பாக உற்பத்தி செய்யக் கூடியவற்றை மிகையாக உற்பத்தி செய்து மேலதிக உற்பத்தியை தமக்குத் தேவைப்படும் வேறுவகையான பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கு பயன்படுத்தினார்கள். பண்டங்களை பரிமாறும்போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக, பிற்காலத்தில் பணத்தை பயன்படுத்தினார்கள். பின்பு வணிக நடவடிக்கைகள் அதிகம் விரிவடைந்தன. இதனால் படிப்படியாக பல்வேறு வகையான வணிக செயற்பாடுகள் தோன்றலாயின.

கைத்தொழில் புரட்சியின் ஊடாக தொழில்நுட்ப முறைகள் உருவாக்கின. இதன் காரணமாக வியாபாரச் சூழல் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில் புரட்சியின் போது கையால் செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு பதிலாக இயந்திர உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறான தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக பாரிய அளவிலான உற்பத்திகள் தோன்றின.

இலங்கையைப் பொறுத்தவரையில் தொழில்நுட்ப சூழலானது வியாபார சூழலில் செல்வாக்கு செலுத்துகின்ற போக்கு அதிகரித்து செல்கின்றது. அதாவது நவீன கண்டுபிடிப்புகளின் மூலம்   தொழில்நுட்ப சூழலானது விரைவாக வளர்ச்சி அடைந்து கொண்டு செல்கின்றது.  மனித வாழ்க்கையைப் போன்று வணிக  கருமங்களும் விரிவுபடுத்துவதற்கு தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக அமைந்துள்ளது. வணிக நடவடிக்கைகள் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக இலத்திரனியல் வணிகமாக மாறியுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைபேசி,  கையடக்க தொலைபேசி,  கணணி போன்ற பல்வேறு தொழில்நுட்ப முறையின் ஊடாக வியாபார நடவடிக்கைகள் விரைவானதாகவும் சரியானதாகவும் வினைத்திறன் உடையதாகவும் மாறியுள்ளது. 

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை