மகா சிவராத்திரி மகிமை
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம் மகா சிவராத்திரி என்று சிறப்பிக்கின்றோம்.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும் , இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலினால் கொண்டாடப்படுவது என்பதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
சிவராத்திரி பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. ஆனாலும் நாம் ஸ்கந்தபுராணத்தில் கூறப்பட்டிருக்கின்ற ஒரு கதையை பார்க்கலாம் .
குருத்ரோகி பலரிடம் நம்பிக்கை துரோகம் செய்து அவப் பெயர் பெற்றான். அவன் மீது கோபம் கொண்ட சிலர் அவனை பகல் முழுவதும் ஒரு சிவன் கோவிலில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் வேட்டையாடுவதற்காக வேடன் நதியை கடந்து அக்கரை சென்றான். தரையில் தன் வலையை விரித்து வைத்துக் கொண்டே இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டிருந்த வேடன் பொழுது போக்காக தான் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் இலைகளை உருவி கீழே வீசி கொண்டிருந்தான்.
அந்த வில்வ இலைகள் மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. அதிகாலையில் மரத்தை விட்டு இறங்கிய வேடன், முன் ,சிவகணம் ஒன்று தோன்றியது. அதனை பார்த்து நீ யாரப்பா? ஏன், என்னை வணங்குகின்றாய்! என்று வேடன் கேட்டான். அதற்கு அந்த சிவகணம் கூறியது வேடரே நேற்று பகல் முழுவதும் சிவன்கோவிலில் சிவபெருமான் திருவுருவத்தின் முன் இருந்தீர் இன்று இரவு முழுவதும் கண் விழித்து வில்வ இலைகளை பிடுங்கி மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைப் பூசித்தீர். நேற்று சிவராத்திரி என்பதால் நீ சிவராத்திரி பலனை பெறுகின்றீர். என்னுடன் வாரும் கைலாயத்திற்கு செல்லலாம் என கூறி வேடனை மரியாதையுடன் பூதகணம் அழைத்துச் சென்றது.
தான் செய்தது அறியாமலேயே சிவராத்திரி விரதம் இருந்த வேடனுக்கே கைலாயம் கிடைத்தது என்றால் சிவராத்திரியின் மகிமை மகத்தானதாகும்.
Comments
Post a Comment