சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று ஊடகம் அவசியமாக உள்ளது
பிரதான ஊடகத்திற்கு வெளியே செயற்படும் ஒரு வெகுஜன ஊடக பாணியாக மக்களின் நலனுக்காக மக்களால் முன்வைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யக்கூடிய ஜனநாயகத் தன்மை கொண்ட வியாபார நோக்கமற்ற ஊடகம் ஊடகம் என கூறப்படுகின்றது. பாரம்பரிய ஊடகப் போக்கிலிருந்து விலகி கொள்கைகளுக்காக செயற்படுவதாகவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த கூடியதுமான இச் சமூக ஊடகங்கள் வெகுஜன ஊடகங்களால் பேசப்படாத பல விடயங்களினை பேசுபவையாக அமைகின்றது.
மாற்று ஊடகம் ஏன் சமூகத்தில் அவசியமாக உள்ளது என நோக்குவோம். அதாவது அதிகாரம்ற்றவர்களை மன்னிக்க செய்யும் வெகுஜன ஊடக போக்கிற்கும் தனியாள் உடைமைக்கும் எதிரான மாற்று ஊடகம் அடித்தள மக்களை மதிப்பதோடு சமூக, பொருளாதார, பண்பாட்டு,சமய,சாதிய ஆதிக்க அதிகார வர்க்கங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, அதிகாரமற்றவர்களின் குரல்களையும் ஒழிக்க செய்வதற்கு மாற்று ஊடகம் அவசியமாக இருக்கின்றது.
வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற வெகுஜன ஊடகங்களில் இருந்து முற்று முழுதாக மாறுபட்ட ஊடகமான மாற்று ஊடகம் மக்களினுடைய பிரச்சினைகளைப் பேசுவது சமூகத்தின் தேவை என்பதால் மாற்று ஊடகம் அவசியமானது.
ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை இனங்கள், பாலின புதுமையினர்,இனவாதம், வன்முறைகள், சாதியம், பால்நிலை சமத்துவமின்மை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் பேசுபவையான மாற்று ஊடகங்கள் சமூகத்தின் தேவையாகவே உள்ளன .
Super
ReplyDeleteThanks
Delete