அச்சுகலை நுட்பங்கள் காலத்திற்கு காலம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளன. அச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும் தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத் தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும். அச்செழுத்துக்களை வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும் வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர். பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன், அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை. இக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக் கலைஞர்...
Comments
Post a Comment