போற்றிப் பேண வேண்டிய மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

 1917 இல் முதலாவது உலக மகா யுத்த காலப்பகுதியில் ரஷ்ய பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்தினை கோரும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் மார்ச் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  இவ்வாறு பல நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சர்வதேச மகளிர் தினம் 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மேலும் இத்தினம் பரவலாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அதாவது இன்றைய மார்ச் 08 இல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தி வந்தது சமுதாயம் .   பெண் என்பவள் சமைப்பதற்கும் வீட்டு வேலைகளை பார்ப்பதற்கும் என்ற எண்ணம் மாறி இன்று நாடாளும்  அளவிற்கு  பெண்கள் வளர்ந்து விட்டனர்.

இதனைக்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. எனவே இன்றைய மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.



Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை