புண்ணியம் தரும் தைப்பூசம்

 மிகவும் சுபிட்சமான நாளான இன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனை கொடுக்கும் என்பது தொன்றுதொட்டு நம்பிக்கையாகும்.  தைப்பூசத் திருநாள் பற்றிய கதை ஒன்றை நாங்கள் பார்க்கலாம்.  

ஒரு நாள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் அசுரர்களை எதிர்த்து அவர்களை அழிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச்சென்று அவரது அருளை நாடி நின்றனர். முக்கண் நாயகனை வேண்டி நின்றதால்  எம்பெருமான் தேவர்களை காக்க தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அதிலிருந்து வெளியேறிய ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகான குழந்தைகளாக மாறின. அவற்றினை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். ஆறு குழந்தைகளும் ஒன்றாக இணைந்து ஆறு முகத்துடன் முருகன் அவதரித்தார். பின்னர் ஞானப்பழம் கிடைக்காததால் கோபமுற்ற முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் குடியேறினார்.

பின்னர் ஒருநாள் அசுரர்களுக்கு அழிவு காலம் வரவே பார்வதிதேவியார் முருகனிடம் சென்று ஞான வேலை தந்தருளினார். இவ்வாறு முருகப்பெருமானுக்கு ஞானவேலை  கொடுத்த நாளே தைப்பூசம் ஆகும். அந்த ஞான வேலைக்  கொண்டு முருகப்பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தருளினார். 




Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை