மாற்று ஊடக பெறுனர்கள்

 மாற்று ஊடகத்தை பயன்படுத்துவோர் அதாவது மாற்று ஊடக கருத்துக்களை பின்பற்றுபவர்கள் மாற்றுஊடகப் பெறுனர்களாவர்.  மாற்று  ஊடகத்திற்கு வெகுசன ஊடகங்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஊடக நுகர்வோர் காணப்பட்டா விட்டாலும் மாற்று ஊடகத்திற்கு என தனியான நுகர்வோர் எண்ணிக்கை காணப்படுகின்றது.

மாற்று ஊடகப் பெறுனர்கள் இரண்டு விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்து எது உண்மை என  முடிவுக்கு வருபவர்களாக இருப்பர். மாற்று ஊடகப் பெறுனர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும்  ஊடக கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பவர்களாகவும்  இருப்பர்.

மாற்று ஊடகமானது  வெகுஜன ஊடகங்கள் பேசாத கருத்துகளை பேசுபவையாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுபவை யாகவும் அமைகின்றன .

மாற்று ஊடக பெறுனர்களுக்கு விளங்கக்கூடிய மொழிநடை கொண்டதாகவே இம் மாற்று  ஊடகங்கள் காணப்படுகின்றது . பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்ட போதும்கூட, அதே மக்கள் "உண்மைக்காக ஏங்குபவர்களாகவும்  இருக்கின்றனர் . எனவே அவர்களுக்கான ஊடகமாகவே இம் மாற்று  ஊடகங்கள் உள்ளன . 

உண்மையைச் சொல்லத்தான் ஊடகம் தேவை அந்தவகையில் சாதாரண மக்களின் உண்மைகளையும், மக்களின் உணர்வுகளை,  இன்னல்களை ஆதாரத்துடன் பேசுபவையாக மாற்று ஊடகம் விளங்குகின்றது . இதனால் மாற்று ஊடகத்திற்கு  என தனியாக பெறுனர் கூட்டம் காணப்படுகின்றனர். 

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை