ஓடு தம்பி ஓடு. ****************** கதிரவரன் நெருங்கி வந்து வெப்பக் கதிர்களால் தாக்குகிறான் கடுகதியில் ஓடு தம்பி ஓடு காடழிந்து வெப்பம் உயர்ந்து பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது ஓடு தம்பி ஓடு. ஆழ்கடலில் அணுவாயுதப் பரிசோதனையாம் அதனால் ஆழிப் பேரலை துரத்துகிறது ஓடு தம்பி ஓடு. ஆழ்துளைக் கிணறுகள் ஏராளம் அதனால் நன்னீரெல்லாம் உவராகிறது நன்னீர் தேடி ஓடு தம்பி ஓடு ஆளுக்கொரு வாகனமாம் அதனால் அதிகமாய் வளி மாசடைகிறது நல்ல வளி தேடி ஓடு தம்பி ஓடு. காடுகளைத் தின்று விட்டான் மனிதன் அதனால் பூமியெங்கும் கட்டிடக் காடுகளாம் காடுகள் தேடி ஓடு தம்பி ஓடு. பசுமை தின்ற பாரினிலே காபனீரொக்சைட் அதிகரிக்கின்றது உயிர்வாழ ஒட்சிசன் தேடி ஓடு தம்பி ஓடு. இயற்கை தின்று வாழாமல் இயற்கையோடு நேசமாய் வாழும் வழிதேடி ஓடு தம்பி ஓடு. உலகம் நிலைத்து உன் சந்ததி வாழ பசுமை உலகம் தேடி ஓடு தம்பி ஓடு.
Posts
Showing posts from December, 2019
- Get link
- X
- Other Apps
சிறுவர் உரிமைகள் மாநாடு சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் 30 ஆவது வருட நிறைவை முன்னிட்டு சிறுவர் உரிமைகள் மாநாடு 23ம் திகதி ரில்கோ நகர விடுதியில் காலை 9.00மணியவில் ஆரம்பமாகி நடைபெற்றது. குறித்த நிகழ்வானது சி.சி.எச் centre for children's happiness (Get)Ltd நிறுவனத்தின் ஏற்பாட்டில் குளோபல் மார்ச் இன் அனுசரணையுடன் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் , வடமாகாண மற்றும் யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்றது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்,தலைவர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாண ஆணையாளர் ரி.விஸ்பரூபன் இயக்குனர் சிறுவர் பாதுகாப்பு வைத்தியர் கோபித்,சி.சி.எச் நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.ரி.மயூரன், சட்ட வல்லுனர் தற்பரன்,மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மாவட்ட இணைப்பாளர் மனோகரன்,திணைக்கள பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள், நிறுவன இயக்குனர்கள்,பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,அமைப்புக்களின் பிரதிந...
- Get link
- X
- Other Apps
சிறுவர் உரிமைகள் மாநாடு- 2019 சிறுவர் உரிமைகள் மாநாடு நேற்றைய தினம் (23.12.2019)காலை 9.00 தொடக்கம் மாலை 6.00 வரை ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் CCH அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் 30 ஆவது வருட நிறைவில் "ஆரோக்கியமான,பாதுகாப்பான சிறுவர் பராயத்திற்காகப் பங்கெடுப்போம் " என்ற தொனிப்பொருளில் இம் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றியிருந்தார். இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார், மற்றும் சிறுவர் நலம்சார்ந்த உத்தியோகத்தர்கள், மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர். சிறுவர் பாதுகாப்பு,சிறுவர் உடல் ஆரோக்கியம்,சிறுவர் உள சமூக ஆரோக்கியம், சிறுவர்களிற்கான நட்புறவு சூழல்,சிறுவர்களிற்கான ஓய்வும் பொழுதுபோக்கும்,சிறுவர்களின் கல்வி உரிமை,முன்பிள்ளைப் பருவ விருத்தி,விசேட தேவை உடைய சிறுவர்களிற்கான வாய்ப்புக்கள்,சிறுவர் பங்கேற்பு இவ் விடயங்கள் தொடர்பான சவால்கள் மற்றும் ...
- Get link
- X
- Other Apps
அந்த அழகிய மாலை நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் நான் ஆம்,அந்த அழகிய மாலை நேரம் கோப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை வீதியில் வாகன இரைச்சலிற்கு மத்தியில் இரசித்த வண்ணம் ஜன்னலோர இருக்கையில் இருந்தபடி இரசித்துக் கொண்டிருந்தேன். இப்போது கல்வியன் சந்தி கழிந்து விட்டது.நானோ பாடலை இரசித்தபடி, எனதருகே ஒரு பெண்ணின் சிணுங்கல் ஒலி கேட்டது. பாடலை கேட்பதில் இருந்த கவனம் கலைந்தது சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரென்று புரியவில்லை. மீண்டும் பாடல் மீது எனது கவனம் . இப்போது தொலைபேசியின் அழுகுரல் அந்த பேருந்து முழுவதும் கேட்கிறது. எல்லோர் பார்வையும் அந்த தொலைபேசியின் அழுகுரலிற்கு சொந்தக்கார பெண் மீதே உள்ளது. அப்போது தான் புரிந்தது பெண்ணின் சிணுங்கல் அல்ல அது அழுகுரல் என்பது. தொலைபேசியை காதில் வைக்கிறாள் அந்தப் பெண்மணி "என்னாச்சு என்ன நடந்த சொல்லுமா தெளிவா" மறுபுறத்தில் அழுகுரல் மட்டுமே கவலை பொங்கிட வார்த்தை வரவில்லை தாய் மனத்திற்கு. தொடர்பாடல் துண்டிக்கப்படுகிறது. மறுபடியும் தொலைபேசி...
- Get link
- X
- Other Apps
போதைப் பொருள் விழிப்புணர்வு செயலமர்வு 2019 போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு கடந்த தினம் (10.12.2019) செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வானது நிகழ்ச்சி அதிகாரியாகிய ரஹீம் மற்றும் உதவி நிகழ்ச்சி அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் போதைப் பொருள் என்பது யாது? போதைப் பொருளிற்கு எவ்வாறு அடிமையாகின்றனர் எனவும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் என்பன இந் நிகழ்வின் போது கூறப்பட்டது. இலங்கைக்கு போதைப் பொருட்களினால் கிடைக்கின்ற வருமானம் குறைவாக உள்ள போதிலும் விநியோகிப்பது கவலையான ஒரு விடயமாக உள்ளது. இதனால் பாமர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் அதிகளவிலான பணத்தை போதைப் பொருளிற்கு செலவிடுகின்றனர் எனவும் விளம்பரங்கள் போதைப் பொருள் பாவனையை அதிகம் தூண்டுகின்றன எனவும் ரஹீம் குறிப்பிட்டார். மேலும் இப் போதைப் பொருள் பாவனையை தடுக்க ஊடகவியலா...
- Get link
- X
- Other Apps
மனிதம் இறக்கவில்லை……. சிறுவர்களுக்கு இன்றைய சமூகத்தில் காணப்படும் சவால்களுக்கு மத்தியிலும், சமூகங்களிலுள்ள பல விடயங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் இயற்கை மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையையும், பொறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தவும் சமூகத்தின் மறு பக்கங்களையும் பார்த்து உணரக்கூடிய வகையில் இயற்கை ஊக்குவிப்பு கழகத்தின் கள விஜயம் அதிபர் தலைமையில் அமைந்திருந்தது. யாழ் திருக்குடும்ப கன்னியர் மட NAC மாணவிகளால் தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலை சுற்றாடலிலுள்ள பொலுத்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாணவிகளாலும் நோயாளர்களுக்கு பரிசுபொருட்களும் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்கள். மேலும் சிறுவர் இல்லத்திற்கும் சென்று அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட்டார்கள். சிறுவர்கள் சமூக, சூழல் சவால்களுக்கு பிரதிபலிப்பு மிக்கவர்களாக செயற்படும் வாய்ப்புக்கள் அவர்கள் மத்தியிலும் அவர்களால் உதவி பெறுபவர்கள் மத்தியிலும் மிக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்..
- Get link
- X
- Other Apps
மூத்த ஊடகவியலாளர் அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் மூத்த ஊடகவியலாளர் அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களின் 31 ஆவது நினைவு தினமானது இன்று 11மணியளவில் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நினைவு தின நிகழ்வை யோசப்பாலா தலைமை தாங்கி நடாத்தினார். அகவணக்கம்,இறைவணக்கம்,மங்கள விளக்கேற்றுதல் அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் குடும்பத்தார்,ஊடகவியலாளர்கள், மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.எஸ்.பெருமாள் அவர்களுடனான அனுபவப் பகிர்வை அனந்தன் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.இதன் போது பெருமாள் அவர்கள் மும்மொழியிலும் சிறந்தவர் என்றும் மொழி பெயர்ப்பு, இலகுநடை போன்றவற்றை தனக்கு அறியத்தந்தவர் எனவும் குறிப்பிட்டார். பி.எஸ்.பெருமாள் அவர்கள் ஊடகத்துறையில் பணியாற்றினார் எனவும் "நடந்தபடி தேடுவோம்" என்ற கவிதை நூலில் "வேர்விட்ட விருட்சம்" என்ற தன்னிலைப்பட்ட கவிதை எழுதி இருந்தார் எனவும் தன்னுடைய அனுபவப் பகிர்வை வேல்ரஞ்சன் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை கற...
- Get link
- X
- Other Apps
ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் செயலமர்வு - 2019 யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட துறையின் ஏற்பாட்டில் "ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் செயலமர்வானது நேற்று 03.12.2019 செவ்வாய்கிழமை வலம்புரி விருந்தினர் விடுதியில் காலை 10மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது. நேற்று காலை 10மணி அளவில் மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் குமரேந்திரன் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இவர் சுகாதாரமான வாழ்வு பற்றியும் சுகாதாரமான உணவுப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார். இவரை தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துவாரகா சூழல் சார்ந்த புகைப்படங்களை திரையிட்டு எமது யாழ் நகரம் எதிர்கொள்ளக் கூடிய சூழல்சார் பிரச்சினையை குறிப்பிட்டு முறையான திண்மக்கழிவு முகாமைத்துவம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் உணர்த்தினார். அதனைத் தொடர்ந்து மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் குமரன் ஆரோக்கியமான கிராம...
- Get link
- X
- Other Apps
யாழ்.பல்கலைக்கழகத்தில் "கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை வெளியீடு நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் 02.12.2019 (இன்று ) பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். "நல்லவை சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருகின்றது. மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை ஆக்கம் பெற்றுள்ளது. இன்று இடம்பெறவுள்ள இச...