அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
எல்லோர் வாழ்க்கையில் வாழ்க்கைப் புத்தகம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த புத்தகத்தை இந்த உலகமே வாசிக்க செய்வது அவரவர் கையில்தான் உள்ளது கனவுகளின் நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் 1931ம் ஆண்டு October 15 ம் திகதி தந்தை ஜைனுலாப்தீனுக்கும் தாய் ஆஷியம்மாவிற்குமகனாக பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தார். அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சிராப்பள்ளியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954-இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர் 1955ல் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம் ஐ டி யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரிய...